அகில இந்திய ஆக்கி: காலிறுதி போட்டியில் வீழ்ந்த கோவில்பட்டி அணி; நாளை அரை இறுதி போட்டிகள் நடக்கின்றன

 அகில இந்திய ஆக்கி: காலிறுதி போட்டியில் வீழ்ந்த கோவில்பட்டி அணி; நாளை அரை இறுதி போட்டிகள் நடக்கின்றன

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த  18ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.

எட்டாம் நாளான நேற்று (25.-ந்தேதி)  கால் இறுதி போட்டிகள் நடந்தன. இதற்கு தகுதி பெற்றிருந்த 8 அணிகள் களத்தில் சந்தித்தன.

முதல் காலிறுதி போட்டியில்  டெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியும் கோவில்பட்டி, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணியும் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில்  இரு அணிகளும் அபாரமாக ஆடின.4-வது நிமிடத்தில் டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வீரர் சுமித் டாப்போ பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.   11-வது நிமிடத்தில் அதே அணி  வீரர் குர்சிம்ரன் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  

22-வது நிமிடத்தில் கோவில்பட்டி, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணி வீரர் சுந்தரபாண்டி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.   40-வது நிமிடத்தில் மீண்டும் அந்த  அணி வீரர் மனோஜ்குமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  

தலா இரு கோல்கள் போட்டு சமநிலை பெற்றதால் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

சிறந்த ஆட்டக்காரர் விருது கோவில்பட்டி, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணி வீரர் அரவிந்த்க்கு வழங்கப்பட்டது.  ஹசன் அலி மற்றும் பிரைஜு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

 இரண்டாவது காலிறுதி போட்டியில் நடெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணியும் மோதின.

இதில் 4:3 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

.சிறந்த ஆட்டக்காரர் விருது டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் சதிஷ் யாதவ்க்கு வழங்கப்பட்டது. சுரேஷ் மற்றும் சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர் 

மூன்றாவது காலிறுதி போட்டியில் டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதின.

இதில் 4:0 என்ற கோல் கணக்கில்  டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

 நான்காவது காலிறுதி போட்டியில் செகந்திராபாத், சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் மோதின.

இதில் 5:1 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

சிறந்த ஆட்டக்காரர் விருது செகந்திராபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி வீரர் சுமன் பெக்க்கு வழங்கப்பட்டது.  

கோபிநாத் ரவி மற்றும் சுரேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்

நாளை அரை இறுதிப்போட்டி .

நாளை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியும் டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் செகந்திராபாத், சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதுகின்றன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *