• May 20, 2024

கோவில்பட்டியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

 கோவில்பட்டியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது,. இதில் 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,

அவர்களுக்கு தமிழ் பெருமிதம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆகிய கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அவரை தொடர்ந்து `உயிர்களின் தமிழ்’ என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி, `கலைவாணர் என்.எஸ்.கே. நகைச்சுவையில் சமூக நீதி’ என்ற தலைப்பில் பேராசிரியர் அருணன் ஆகியோர் பேசினார்கள்.

முன்னதாக தமிழ் பெருமிதம் குறித்த தலைப்புகளின் கீழ் சிறப்பாக பேசியர் மாணவ மாணவிகள் பெருமித செல்வன், பெருமித செல்வி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர.

இதையடுத்து பேச்சாளர்களின் உரையில் இருந்து சிறப்பாக கேள்வி கேட்ட மாணவர்களுக்கு பேச்சாளர்கள் பதில் அளித்தனர், சிறப்பாக கேள்வி கேட்ட மாணவ, மாணவிகள் கேள்வியின் நாயகன்/ கேள்வியின் நாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,

இறுதியில் சிறப்பாக அரங்குகள் அமைத்த அரசு துறையினருக்கும் பெருமித செல்வன், பெருமித செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி ஆக தேர்வு ஆனவர்களுக்கு கோட்டாட்சியர் மகாலட்சுமி பரிசு வழங்கினார்.\

நிகழச்சியில் தமில்கனவு மாவட்ட பொறுப்பு அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் பிறப்பு, கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, நேஷனல் பொறியயல் கல்லூரி இயக்குனர் சண்முகவேல், கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல் மற்றும் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் காந்திராஜன், கல்லூரி கல்வி இயக்குனரக பொறுப்பு அலுவலர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *