• May 20, 2024

மன நலம் பாதித்த  பெண்மீட்பு: கோவில்பட்டி தாசில்தார் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்

 மன நலம் பாதித்த  பெண்மீட்பு: கோவில்பட்டி தாசில்தார் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்

தூத்துக்குடி புதிய துறைமுகம் கிரீன் கேட் அருகில் மன நலம் பாதிக்க பட்ட நிலையில் பெண் ஒருவர் இருப்பதாக 25/02/2023அன்று தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி ஆய்வாளர் தங்கராஜ் உத்தரவின் பேரில் மகளிர் காவலர் தமிழ்ச்செல்வி  மூலம் அந்த பெண் மீட்கப்பட்டார்.’

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விஜயதர்சினி ( 51);என்று தெரிய வந்தது. முடுக்குமீண்டான் பட்டி ஆக்டிவ் மைண்ட் ஸ் தொண்டு நிறுவன மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 இந்நிலையில் மன நலம் பாதிக்க பட்ட பெண்ணை தேடி அலைந்த குடும்பத்தினர்  முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். காவல் ஆய்வாளர் விசாரித்ததில் கிரீன் கேட் அருகே மீட்கப்பட்ட பெண் முத்தையாபுரம் ராமச்சந்திரன் மனைவி தாமரை புஷ்பம் என்ற விஜய தர்சினி என தெரிய வந்தது.

காவலர் ஆறுமுக நயினாருடன் குடும்பத்தினரை ஆக்டிவ் மைண்ட் ஸ் மன நல காப்பகத்திற்கு  அனுப்பி வைத்தனர். காப்பக நிர்வாகி தேன் ராஜா,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவ சங்கரன் அவர்களிடம் ஆலோசனை பெற்று கோவில்பட்டி தாசில்தார் சுசிலா முன் விஜய தர்சினியின்  உடன் பிறந்த சகோதரி விஜயா, அண்ணன் ஜெயகுமார்,அண்ணி இசக்கியம்மாள் உரிய ஆவணங்களை காட்டினர், இதையடுத்து தாசில்தார் சுசிலா முன்நிலையில்  தாமரை புஷ்பம் என்ற விஜய தர்சினி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் விஜய தர்சினி அணிந்திருந்த தங்க கம்மல்,மற்றும் பவள பாசி போன்ற பொருட்களை அவரது உறவினர்களிடம் காப்பக நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *