தூத்துக்குடியில் பா.ஜ.க.நிர்வாகிகள் உள்பட 100 பேர், தி.மு.க. வில் சேர்ந்தனர்
![தூத்துக்குடியில் பா.ஜ.க.நிர்வாகிகள் உள்பட 100 பேர், தி.மு.க. வில் சேர்ந்தனர்](https://tn96news.com/wp-content/uploads/2023/02/IMG-20230202-WA0006.jpg)
.தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள் உட்பட 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி, திமுக நிர்வாகி வி. வினோத் ஏற்பாட்டில், இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில்,100க்கும் மேற்பட்ட பாஜகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்து கொண்டனர்.
பாஜக வடக்கு மண்டல பொருளாளர் சிவராம், பொதுசெயலாளர் காமராஜ், துணைத்தலைவர் நவனீதன், செயலாளர் வேல்முருகன், மகளிர் அணி தலைவி தனலெஷ்மி, திரேஸ்புரம் கிளைதலைவர் ரவிந்திரன், பூபால்ராயர்புரம் கிளைதலைவர் கிளாஸ்டன், பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் பரத், முத்துகிருஷ்ணராஜபுரம் கிளைதலைவர் முருகன், கந்தசாமிபுரம் கிளைதலைவர் கிருஷ்ணகுமார், சக்திவிநாயகபுரம் கிளைதலைவர் பொன்ராம், எழில்நகர் கிளைதலைவர் கந்தசாமி, சுந்தரவேல்புரம் கிளைதலைவர் நாகராஜ், அம்பேத்கர் நகர் கிளைதலைவர் நேரு, ஜயர்விளை கிளைதலைவர் கணேசன் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவர்..
அவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)