தூத்துக்குடியில் கால்வாய் அமைக்கும் பணி: கீதா ஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்காதவாறு பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. லெவிஞ்சிபுரம் முதல்தெரு இரண்டாவது தெரு பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மற்றும் கட்சியினர் உடன் சென்று இருந்தனர்,
