தூத்துக்குடி மாவட்டத்தில் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இதனிடையே, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தூத்தக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்தக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, கயாத்தார், கடம்பூர், சூரங்குடி ஆகிய ஊர்களில் மழை பெய்தது
இதில் அதிக பட்சமாக கயத்தாறில் 27 மி.மீ., கடம்பூரில் 11, திருசெந்தூர் 10, தூத்தக்குடி 8, காயல்பட்டினம் 7, சூரங்குடி 2, கோவில்பட்டி 1 மி.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது,
மழை மற்றும் முன் அறிவிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற கால தாமதமான அறிவிப்பு என்பது மக்களிடையே மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வீடு திரும்பும்போது இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழை காரணமாக விடுமுறை அளிக்க படுகிறது. என்ற செய்தி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்படுகிறது.
மீண்டும் மழையில் நனைந்த வாறு குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டதாக தெரிவித்தனர்,
