ஓட்டபிடாரம் அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்காண அறிவியல் மற்றும் கணிதம் ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருச்சியில் நடந்த விழாவின் போது தொடக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது, அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வ.,உ.சி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்த வானவில் மன்றம் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு மன்றத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்,
