இலங்கைக்கு உரம் கடத்த முயற்சி ; கீழக்கரை கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள்
கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் உரம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது,.
வேதாளை என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரத்தை கடத்தி செல்வதற்காக காரில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செயதனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ எடையுள்ள 30 கேன்களில் நிரப்பப்பட்ட உரத்தை கைப்பற்றி மரைன் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள்.
