இரை தேடி ஊருக்குள் வந்த மானை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டி இறந்தது

இது போன்ற மான் தான் இறந்து போனது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நேற்று இரவு மிளா என்ற அரிய வகை மான் காட்டுப்பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்கு வந்து விட்டது. இதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர், இதை தொடர்ந்து போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தப்பி ஓட வழியின்றி மிரண்டு போய் நின்ற மானை பிடிப்பதற்கு வனத்துறை ஊழியர்கள் முயன்றனர். மாடி கட்டிடத்தில் நின்றபடி நீலாமான சுருக்கு கயிறை போட்டு பிடித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த மான் சுருக்கு கயிறில் மாட்டிகொண்டது.
அதில் இருந்து தப்பிக்க மான் முயன்றபோது கழுத்து இறுக்கி இறந்து போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மான் இறந்தது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
