மொழிப்போர் தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்; மு.க.ஸ்டாலின் திறந்து
சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவு தினத்தை ஒட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக நினைவிடத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்! வீர […]