மாநில கேரம் போட்டிக்கு தகுதி: நாகலாபுரம் பள்ளி மாணவருக்கு பாராட்டு
![மாநில கேரம் போட்டிக்கு தகுதி: நாகலாபுரம் பள்ளி மாணவருக்கு பாராட்டு](https://tn96news.com/wp-content/uploads/2025/01/4c8bf106-2729-4a83-8857-ebb05744a3a5-e1737779571274-850x560.jpg)
கேரம் போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட தனிப்பிரிவு மாணவர்களுக்கான போட்டி, தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. இப் போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில் நாகலாபுரம் எஸ்.கே.கே இந்து உயர்நிலைப்பள்ளி மாணவர் துல்கிப்லு வெற்றி பெற்றார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
.வெற்றி பெற்ற மாணவர் துல்கிப்லு-வை பள்ளிச் செயலாளர் ஜெயராஜ், தலைமை ஆசிரியை சுசிலா, உடற்கல்வி ஆசிரியர் பார்த்திபன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,அலுவலர்கள்,பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)