கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உலக மனச்சிதைவு தினம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட மன நல திட்டம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மனச் சிதைவு தினம் கொண்டாடப்பட்டது,

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்கானிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட மன நல திட்ட மருத்துவர் ஜோஸ்வா மனச்சிதைவு பற்றி பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்,
ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, முன்னிலை வகித்து மன நலத்தை பற்றி பேசினார், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டு, சந்தேக மன நோய், மனக்கவலை நோய், மனபதற்றம் நோய், மனச் சிதைவு நோய், தற்கொலை எண்ணம், குடிப்பழக்கம் போன்ற எண்ணங்களுக்கு கண்காட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது

,மனதை மகிழ்வோடு வைப்போம், மகிழ்ச்சியாய் வாழ்வோம் என உறுதிமொழி கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது, சமூக பணியாளர் பெரியசாமி அனைவரையும் வரவேற்றார், உளவியலாளர் சேது நன்றி கூறினார், நிகழ்வில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மேற்பார்வையாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
