கோவில்பட்டியில் 1974-77 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது கோவில்பட்டி புதுரோடு ஆழ்வார் தெரு செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமிற்கு வரும் போது முகவரி சான்றிதழ் நகல் ஏதேனும் கட்டாயமாக கொண்டு வர வேண்டும். முகாமில் தேர்வு […]
கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ஏதாவது ஒரு கோவிலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மாத 41-வது அன்னதான நிகழ்ச்சி வேலாயுதபுரம் நித்திய கல்யாண விநாயகர் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் லவ ராஜா வரவேற்றார். சங்கரநாராயணன், பூக்கடை செல்வம், நகர கூட்டுறவு வங்கி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டங்குளம் கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி […]
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாக அர்ச்சனன். மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வேளார்குளத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது அவர்களில் 6 பேர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்தனர். அப்போது அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று, தண்ணீரில் தத்தளித்த 4 பேரை மீட்டனர். ஆற்றில் […]
தமிழில் தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் வரை படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் வாத்தி.வெங்கி அட்லூரி இயக்கி இருந்த இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார். இத்திரைப்படமும் உலகளவில் ரூ.110 கோடி வசூலித்தது. இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘சவதீகா’ மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இதனையடுத்து, ‘விடாமுயற்சி’ படத்தின் 2வது பாடல் இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘பத்திக்கிச்சி’ என்ற […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்றார். அப்போது அங்குள்ள யாழ்ப்பாணம் நகரில் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையத்தை 2023, பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதனிடையே இந்தியா,- இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா மும்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.,இதையொட்டி பாலாலயம் மற்றும் பாலஸ்தாபன பூஜை 20-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கி, திருமறை, விக்னேஷ்வர பூஜை, புன்னியாகவாசனம், ணிக்குமேல் பஞ்சகவ்வியம், வாஸ்து சாந்தி, தில்வந்தனம், பிரவேசபலி, அவாகி கலாகர்சனம், வேத பாராயணம், […]
உலகெங்கிலும் பக்தர்களை கொண்ட தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் தைப்பூசம் இந்த வருடம் பிப்ரவரி 11ஆம் தேதி அமைந்திருக்கிறது. இதையொட்டி முருகப்பெருமானின் அருளைப் பெற கடைபிடிக்க வேண்டிய 21 நாள் விரத முறை பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம். இந்த வருடம் தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. […]