கோவில்பட்டியில் 26-ந்தேதி இலவச கண் பரிசோதனை முகாம்
![கோவில்பட்டியில் 26-ந்தேதி இலவச கண் பரிசோதனை முகாம்](https://tn96news.com/wp-content/uploads/2025/01/images-4.jpeg)
கோவில்பட்டியில் 1974-77 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது
கோவில்பட்டி புதுரோடு ஆழ்வார் தெரு செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமிற்கு வரும் போது முகவரி சான்றிதழ் நகல் ஏதேனும் கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.
முகாமில் தேர்வு செய்யப்படும் கண்புரை நோயாளிகள் முகாம் அன்றே கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு உள்விழி (IOL) லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
முகாமின் போது கண் விழித்திரை பரிசோதனை. கண்நீர் அழுத்த நோய் : பரிசோதனை செய்து கொள்ளலாம். பிறவி கண்புரை, மாறுகண், பிறவி கண்நீர் அழுத்த நோய் மற்றும் மாலைக்கண் ஆகிய நோய் உள்ள குழந்தைகளை இம்முகாமிற்கு அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து : உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் ரூ.300 விலையிலிருந்து முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும் இம்முகாமில் மருந்து, மாத்திரை இலவசம் தொடர்புக்கு : செல் எண்கள் 94434 55679, 94431 23575, 97892 12332,94435 27495
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)