ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
![ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்](https://tn96news.com/wp-content/uploads/2025/01/4d44d243-ea5b-4366-a4f7-800629f1dff3-e1737373862868-850x420.jpeg)
கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ஏதாவது ஒரு கோவிலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மாத 41-வது அன்னதான நிகழ்ச்சி வேலாயுதபுரம் நித்திய கல்யாண விநாயகர் கோவிலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் லவ ராஜா வரவேற்றார். சங்கரநாராயணன், பூக்கடை செல்வம், நகர கூட்டுறவு வங்கி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்டங்குளம் கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி பிரசாதம் வழங்கினார்..கோவில்பட்டிவட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் சீனிவாசா பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஜவகர், அருண் பேக்கரி மாடசாமி, ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராகவேந்திரா சேவா அறக்கட்டளை அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாண்டியன், தங்கராஜ், முத்து மாரியப்பன், ஆசிரியர் ஜீவானந்தம், பூக்கடை சுந்தரமூர்த்தி, பசுமை இயக்கம் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதி ஜுவல்லர்ஸ் அதிபர் கதிரேசன் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)