கோவில்பட்டி பள்ளியில் படித்தவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
![கோவில்பட்டி பள்ளியில் படித்தவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு](https://tn96news.com/wp-content/uploads/2025/01/kvpschool-1.jpg)
கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் 1985 -86ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1985 – 86ல் இப்பள்ளியில் பயின்ற 83 முன்னாள் மாணவ மாணவியர், 25 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர் – மாணவிகளில் 30 பேர் மத்திய புலனாய்வுத்துறை, ஆசிரியர்கள் காவல்துறை, ராணுவம், என அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 7 டாக்டர்கள் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் பலர் தொழிலதிபர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது நண்பர்களை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி தங்களது பள்ளி கால நிகழ்வுகளை பேசி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து தாங்கள் பயிலும் போது தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மற்றும் தற்போது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவ மாணவிகள் மரியாதை செய்தனர். சில முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் காலில் விழுந்து தங்களது மரியாதையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சி முடிவில் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)