கோவில்பட்டி நகராட்சியில் 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு:100 நாள் வேலை திட்டம் தொடரக்கோரி கிராம மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு போராட்டம்
![கோவில்பட்டி நகராட்சியில் 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு:100 நாள் வேலை திட்டம் தொடரக்கோரி கிராம மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு போராட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2025/01/28b149f3-a25a-4699-aacb-96feac9bd5d1-850x560.jpeg)
கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், மூப்பன்பட்டி மந்தித்தோப்பு, நாலாட்டின்புத்தூர், இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி ஆகிய 7 ஊராட்சி கிராமங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சியுடன் 7 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 100 நாள் வேலை திட்டம் தொடரக்கோரியும் கிராமமக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நேற்று காலை நடத்தியது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையில் கட்சியினர் மற்றும் 7 ஊராட்சிகளின் கிராம மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு சேதுராமலிங்கம், நகரச் செயலாளர் சரோஜா. மாவட்டக்குழு பரமராஜ், , நகர துணை செயலாளர் த. அலாவுதீன்,தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், ஜனநாயக வாலிபர் சங்க துணை செயலாளர் செந்தில் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கிளை செயலாளர் மணிகண்டன், கிளை செயலாளர் மாரியப்பன், நகர பொருளாளர் ராஜி, வக்கீல் ரஞ்சனிகண்ணம்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.,
கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கிராம மக்களை கோட்டாட்சியர் நேரில் சந்தித்து மனு பெற வேண்டுமென்றனர். அதற்கு போலீசார், 4 பேர் மட்டும் அவரை சந்தித்து மனு வழங்குங்கள் என்றனர்.
இதனை ஏற்க மறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். டி.எஸ்.பி. ஜெகநாதன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கோட்டாட்சியர் மகாலட்சுமியும் வெளியே வந்து அவர்களிடம் மனுவை பெற்றார். பின்னர்,இது அரசின் கொள்கை முடிவு. உங்களது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், என்றார்.
அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
மந்தித்தோப்பு, நாலாட்டின்புத்தூர், மணியாச்சி மூப்பன்பட்டி இலுப்பையூரணி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம் ஆகிய 7 ஊராட்சி மன்றங்களை கோவில்பட்டி நகாரட்சியுடன் இணைக்க உள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த 7 பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைத்தால் தற்போது அவர்கள் செய்து வருகின்ற 100 நாள் வேலையை இழக்கும் நிலை உள்ளது. இதனால் அக்கிராமங்களில் வசித்துவரும் ஏழை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கிராமங்களில் அவர்கள் பெற்றுவரும் பிற சலுகைகளும் இழக்கும் நிலை உள்ளது.
மேலும் வீட்டுவரி போன்ற வரிகளும் உயர்த்தப்படும் நிலை உள்ளது. இது எழை மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே மந்திநோப்பு உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மேலும் வரி விதிப்பால் மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கும், கிராம மக்கள் பாதிப்படையாமல் 100 நாள் வேலை திட்டம் தொடர்ந்து நடைபெற வலியுறுத்தி தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
L
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)