தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 356 கோரிக்கை மனுக்கள்
![தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 356 கோரிக்கை மனுக்கள்](https://tn96news.com/wp-content/uploads/2025/02/makkalkuraimeet.jpg)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாள் நடைபெற்றது.
மாவடடத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த்திருந்த பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 356 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பக்வத் அறிவுறுத்தினார்..
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைத் துறை) லோரைட்டா, உதவி காவல் காவல் கண்காணிப்பாளர் பி.ஆர். மீரா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)