• February 12, 2025

மும்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் பாலாலயம் மற்றும் பாலஸ்தாபன பூஜை 20-ந் தேதி நடக்கிறது

 மும்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் பாலாலயம் மற்றும் பாலஸ்தாபன பூஜை 20-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா மும்பிலிவெட்டி

கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருப்பணிகள்  நடைபெற இருக்கிறது.,இதையொட்டி  பாலாலயம் மற்றும் பாலஸ்தாபன பூஜை 20-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கி,  திருமறை, விக்னேஷ்வர பூஜை, புன்னியாகவாசனம், ணிக்குமேல் பஞ்சகவ்வியம், வாஸ்து சாந்தி, தில்வந்தனம், பிரவேசபலி, அவாகி கலாகர்சனம், வேத பாராயணம், மூலமந்திர ஹோமம், நவகிரக ஹோமம், மஜா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது,

காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பாலாலயம் மற்றும் பாலஸ்தாபண பூஜை நடக்கிறது, சிறப்பு வேள்வி நடத்துபவர்: சிவாச்சாரியார். ஈ.சானசிவம் லெ.க.கார்த்திக்ராஜா.

பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் எஸ்.தங்கவேல், பொருளாளர் டி.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *