Month: October 2024

ஆன்மிகம்

ஆலயத்தில் பிரகார வலத்தால் என்ன கிடைக்கும்?

நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போது பிரார்த்தனையை முடித்துவிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறோம். நாம் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்! #ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று அர்த்தம். #3 முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும். #5 முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும். #7 முறை வலம் வந்தால் காரிய வெற்றி #9 முறை வலம் வந்தால் […]

செய்திகள்

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதன் காரணமாக ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சராக., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் […]

செய்திகள்

16 மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், IND-TN-10-MM-459 மற்றும் IND-TN-10-MM-904 பதிவெண்கள் கொண்ட […]

சினிமா

புஷ்பா-2 திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவுப்பு

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ளது. […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஆட்டு சந்தை;அமைச்சர் கீதாஜீவன் 3 ஆடுகள் வாங்கி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைகள் தூத்துக்குடி, எட்டையாபுரம், மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. .இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இசிஆர் சாலை கோமஸ்புரம் பகுதியில் நடைபெற்ற ஆட்டு சந்தை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்று பேசினார். இச்சந்தையை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி […]

செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்தும் விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிவான் கான்வே 76 […]

செய்திகள்

திடீரென பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்திய சோமேட்டோ: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ திடீரென பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் அண்மை காலமாக பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்புடன் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் ஆர்டர் செய்து உண்ண முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்து உண்பது வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ கடந்த 2008-ம் ஆண்டு தீபிந்தர் […]

செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 531 விக்கெட்டுகள்: நாதன் லயனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு போட்டியாக இருக்கும் சமகால கிரிக்கெட்டர் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டெவான் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்; முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பங்கேற்பு

கோவில்பட்டி,எம்.எம்.வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ பள்ளியில்     மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான  வழிகாட்டுதல் கருத்தரங்கம் பள்ளி இயக்குநர் முத்துபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.பள்ளி நிர்வாக உறுப்பினர்களான . கலா நாதன்,ஜோதிமாரியப்பன்   ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கருத்தரங்கில் முன்னாள் டி.ஜி.பி..சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவ-மாணவியர் அடுத்து எவ்விதப் படிப்பைத் தொடர்வது, எங்கு படிப்பது, எந்தத் துறையில் கவனம் செலுத்துவது, எந்தப் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுப்பது போன்ற கல்வி வழிகாட்டுதல் கருத்துகளை வழங்கியதுடன் , மாணவர்கள் மற்றும் […]