பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு என்ற குற்றாலக் குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது. அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஆண்ட பகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவள மலையை. தூர்வார ரிஷி இத்தலத்து முருகனை வணங்கியுள்ளார். செட்டிநாட்டு பாடல் பெற்ற தலம். பழமையான இக்கோயிலில் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதை என்றால் 300. முருகப் பெருமான் சூரனை […]
*விச்வம் – எல்லாமாய் இருக்கிறான். *விஷ்ணு: – எல்லாவற்றினுள்ளும் இருக்கிறான். * விச்வம், விஷ்ணு இவை இரண்டுமே நாராயண என்கிற சொல்லுக்கு அர்த்தம் காட்டுகின்றன. இப்படி சமஸ்த விஷயங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பதனாலே விஷ்ணு என்பது வெறும் சொல் அல்ல… அவன் சர்வ வியாபி என்பதைக் குறிக்கும் மந்த்ரம். எல்லா வஸ்துக்களிலும் சராசரங் களிலும் பரவியிருக்கிறான். பூதத்தாழ்வார் சொல்கிறார் :- “மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான்”. இது வேத வாக்யத்தின் தமிழ் வடிவம்தான்! அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் […]
கோவில்பட்டி காந்தி மண்டப வளாகத்தில் கல்யாண கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் மகா குடமுழுக்கு விழா இன்று(வியாழக்கிழமை)காலை நடைபெற்றது. காலை 7.31 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் கடக லக்கினத்தில் கல்யாண கணபதி பெருமானுக்கும், கோபுர கலசத்துக்கும் புனித நீர் தெளித்து மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவாச்சாரியார் ரகு பரசுராம பட்டர், குடமுழுக்கை நடத்தினார்.
இருவழி அகலப்பாதை அமைக்கும் பணி: கோவில்பட்டி அருகே கையகப்படுத்தும் இடங்களை ஆட்சியர் பார்வையிட்டு
மதுரை-நாகர்கோவில் இடையேயான ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க முடியவில்லை என தெரிவித்து வந்த ரெயில்வே நிர்வாகம் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின்பேரில் மதுரை-நாகர்கோவில் இடையே இருவழி ரெயில்பாதை திட்டப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. மதுரை-வாஞ்சிமணியாச்சி, வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி, வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் என 3 பகுதிகளாக இருவழி ரெயில்பாதை திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இடையில் திட்டப்பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்போது பணி நடைபெற்று […]
* தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மற்றும் குழுவினர், கோவில்பட்டி – குருமலை சாலையில் உள்ள அனுகிரஹா என்ற மாவு மில்லில் ஆய்வு செய்தனர். அப்போது அந்நிறுவனத்தில் மறுபொட்டலமிட 2000 கிலோ மைதா இருப்பு வைக்கப்பட்டிருந்ததும், அது 25.5.2023 அன்றே காலாவதியானதும் கண்டறியப்பட்டது. எனவே, பொதுமக்களுக்கு விற்பனைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக, அந்த மைதா உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு […]
1. காயத்ரி மந்திரத்தை பயணத்தின்போது, சொல்லக் கூடாது. சுத்தமான இடத்தில் தான் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 2. கற்பூரம் ஏற்றி கடவுளுக்கு காட்டும் பொழுது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுற்றிக் காண்பிக்க வேண்டும். தொப்புளுக்கு இரண்டு தடவை சுற்றிக் காண்பிக்கவேண்டும். முகத்துக்கு ஒரு தடவையும், முழு உருவத்துக்கும் மூன்று தடவையும் காண்பித்து வழிபட வேண்டும். 3. நமது வீட்டு வாசலில் கோலம் போடாமலும், வீட்டில் விளக்கேற்றாமலும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது. அப்படிச் […]
சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவ ருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ் டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னதி யில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் […]
தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. பங்குனி மாதம் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என ஒவ்வொரு மாதமும் 30, 31 நாட்கள் கொண்டு முடியும். ஆனி மாதம் 32 நாட்களை கொண்டுள்ளது. அது ஏன்? என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். :சூரியனின் வடதிசை பயண காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினை கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 […]
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நாளை 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அதனடிப்படையில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் கடைகள் மூடப்பட உள்ளன, மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் வருமாறு:- சென்னை மண்டலம் : 138 டாஸ்மாக் மதுக்கடைகள் கோவை – 78 மதுரை – 125 சேலம் – 59 திருச்சி – 100 டாஸ்மாக் மதுக்கடைகள். மதுரை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள […]
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருந்துகள் ; இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.தாலுகா செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார்.நகர துணை செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ஜி.பாபு, நிர்வாக குழு சேது ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட குழுவை சேர்ந்த பரமராஜ், செல்லையா, ரஞ்சனி கண்ணம்மா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:- *வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் மாற்றம், சான்று போன்றவற்றுக்கு லஞ்சம் வாங்குவது […]