காந்தி மண்டப வளாகத்தில் கல்யாண கணபதி கோவில் குடமுழுக்கு விழா
கோவில்பட்டி காந்தி மண்டப வளாகத்தில் கல்யாண கணபதி கோவில் உள்ளது. இக்கோவில் மகா குடமுழுக்கு விழா இன்று(வியாழக்கிழமை)காலை நடைபெற்றது.
காலை 7.31 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் கடக லக்கினத்தில் கல்யாண கணபதி பெருமானுக்கும், கோபுர கலசத்துக்கும் புனித நீர் தெளித்து மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவாச்சாரியார் ரகு பரசுராம பட்டர், குடமுழுக்கை நடத்தினார்.