இருவழி அகலப்பாதை அமைக்கும் பணி: கோவில்பட்டி அருகே கையகப்படுத்தும் இடங்களை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

 இருவழி அகலப்பாதை அமைக்கும் பணி: கோவில்பட்டி அருகே கையகப்படுத்தும் இடங்களை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

மதுரை-நாகர்கோவில் இடையேயான ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க முடியவில்லை என தெரிவித்து வந்த ரெயில்வே நிர்வாகம் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின்பேரில் மதுரை-நாகர்கோவில் இடையே இருவழி ரெயில்பாதை திட்டப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது.

மதுரை-வாஞ்சிமணியாச்சி, வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி, வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் என 3 பகுதிகளாக இருவழி ரெயில்பாதை திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இடையில் திட்டப்பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி நகரம், இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி மற்றும் மந்தித்தோப்பு ஆகிய பகுதிகளில் மதுரை – தூத்துக்குடி த இடையே ரெயில்வே இருவழி அகலப்பாதை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். நிலம் எடுப்பு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்  தனி மாவட்ட வருவாய் அலுவலர்  (இஸ்ரோ) மாரிமுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர்.ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்.

நிலம் கையகப்படுத்தும் பணியினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ளவேண்டும் என்று ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும் அந்த பகுயிகளில் வசிக்கும் மக்களிடம் கருது கேட்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *