கந்தசஷ்டி கவசத்தின் மகிமைகள்

 கந்தசஷ்டி கவசத்தின் மகிமைகள்

கந்த சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.

*வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும்.

*லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஏற்படும்.

*கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும். முக வசீகரம் ஏற்படும்.

*செவ்வாய்க் கிழமை மூன்று முறை கந்த சஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

*சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை சஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.

*கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.

*கந்த சஷ்டி கவசம் என்பது சாதாரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.

*முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் சஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்..எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *