சாலை விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சத்து 35 ஆயிரம் நிதி சேகரிப்பு
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ராஜாமார்ஷல் என்பவர் கடந்த 27.6.2022 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இதைதொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு அவருடன் 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்து அவருடன் பணிபுரிந்து வருகின்ற தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறையினரும் சேர்ந்து ரூபாய் 17,35,000/- நிதி திரட்டி ராஜாமார்ஷல் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு ரூபாய் 16 லட்த்திற்க்கு எல்.ஐ.சி வைப்பு நிதியாகவும், அவரது தந்தை லெட்சுமணன் மற்றும் தாயார் சமுத்திரகனி ஆகியோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கமாகவும், அவரது மனைவி தேவிகா என்பவருக்கு ரூ 26 ஆயிரத்தை ரொக்கமாகவும் நிதியுதவி செய்துள்ளனர்.
இந்த நிதியுதவியை 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல்துறையினரின் சார்பாக . ராஜாமார்ஷல் குடும்பத்தினருக்கு இன்று (17.9.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.