பெரியார் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை; ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேறு படம் வைக்கப்பட்டது
![பெரியார் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை; ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேறு படம் வைக்கப்பட்டது](https://tn96news.com/wp-content/uploads/2022/09/500x300_877895-epsops.webp)
பெரியார் பிறந்த நாளான இன்று (செப்.17) அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.
பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார்.
அப்போது சிலையின் கீழ் ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தி விட்டு சென்ற பிறகு சிறிது நேரத்தில் பெரியார் படத்தையும் அ.தி.மு.க.வினர் கொண்டு சென்று விட்டார்கள்.
அதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் வர உள்ள நிலையில் மற்றொரு பெரியார் புகைப்படம் அவருடைய சிலை அருகே வைக்கப்பட்டது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)