பா.ஜனதா கட்சியினர் ரத்ததானம்
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி சார்பில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரத்ததான முகாமை பாரதீய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தொடக்கி வைத்தார், 25க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
மருத்துவர் தேவசேனா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரொடி, மாவட்ட செயலாளர் ஜெயஹர்ஷன், மாவட்ட துணைச்செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் பொன்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாரத்குமார்,ஆனந்த், காசிராஜன், பா.ஜனதா நகர தலைவர் சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.