• February 8, 2025

தேநீர் கோப்பைகளால் உருவாக்கிய பிரதமர் மோடியின் மணல் சிற்பம்

 தேநீர் கோப்பைகளால் உருவாக்கிய பிரதமர் மோடியின் மணல் சிற்பம்

ஒடிசாவை சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், 1,213 மண்பாண்ட தேநீர் கோப்பைகளை கொண்டு பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை உருவாக்கினார். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் 5 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
இதற்காக 5 டன் அளவு மணல் பயன்படுத்தப்பட்டு இந்த மாபெரும் மணல் சிற்பம் கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி’ என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.
இது பற்றி சுதர்சன் பட்நாயக் கூறுகையில், “பிரதமர் மோடி ஒரு தேநீர் விற்பவராக இருந்தது முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தை காட்ட இந்த மண்பாண்ட தேநீர் கோப்பைகளை பயன்படுத்தியுள்ளோம்.எனது கலை மூலம் பிரதமருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *