கலை, இலக்கிய போட்டி; 612 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
கோவில்பட்டியில் சுதந்திர தின பவளவிழா கலை இலக்கிய போட்டிகள் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய உலா ரவீந்தர் தலைமை தாங்கினார். ஜெய்கிரிஸ்ட் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார், கவிஞர் பார்த்திபன் வரவேற்றார்,
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் சிவபெருமாள், போடுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்,
பரதம், கிராமிய நடனம், வினாடி வினா, ஓவியம், மாறுவேடம், கட்டுரை, பேச்சு போட்டி, உள்பட 17 வகையான 75 போட்டிகள் நடைபெற்றன, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 612 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,
போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக நெல்லை பாமணி, வழக்கறிஞர் தாரணி,முருகசரஸ்வதி, விநோபா,துரைராஜ், முருகேஸ்வரி,உலகம்மாள் ,விஜி, சைலஜா, பரணி, தாஜு நிஷா,ஜெயா,மலர்செல்வி, விழா முடிவில் ஆசிரியர் கணபதி நன்றி கூறினார்.