கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைப்பெற்றது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு கொலு மண்டப்பத்தில் வளைகாப்பு விழா கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 11 சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்பாள் சன்னதியில் வளைகாப்பும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.
கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.