கோவில்பட்டி கோட்டத்தில் வியாழக்கிழமை மின்தடை பகுதிகள்
கோவில்பட்டி கோட்டத்தில் பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. “
எனவே, வியாழன் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வேலாயுதபுரம் 2-வது தெரு பகுதிக்கும், சிட்கோ உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் எட்டையாபுரம் ரோடு, சண்முகா தியேட்டர் முதல் கால்நடை மருத்துவமனை வரை உள்ள பகுதிகளுக்கும், சுப்பிரமணியபுரம் பகுதிக்கும், விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பாண்டவர் மங்கலம், சண்முக சிகாமணி நகர், சாய் சிட்டி, ராஜிவ் நகர் 4,5,6-வது தெரு பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.