• February 7, 2025

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் ரூ.74 கோடி நிவாரண பொருட்கள்

 தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் ரூ.74 கோடி நிவாரண பொருட்கள்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி சென்னையில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் கப்பல் மூலம் அரிசி, பால் பவுடர் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பலின் மூலமாக ரூ.54 கோடி மதிப்பிலான 16356 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 201 டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ. 14 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பிலான 16,600 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கபட்டன.
அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கனிமொழி எம்.பி., பச்சைக்கொடி காட்டி சரக்கு கப்பலை வழியனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில், வ.உ.சி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாரன்ஸ் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *