அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு
![அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் மனு](https://tn96news.com/wp-content/uploads/2022/07/FB_IMG_1658142053847-1-850x504.jpg)
கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் கிழக்கு பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோவில்பட்டி கிராம ஊராட்சிக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் சார்பில் அடிப்படை வசதிகள் கேட்டு அளிக்கப்பட்ட மனுவில் கூறி இருந்ததாவது:-
சமத்துவபுரம் கிழக்கு பகுதியில் 25 குடும்பங்களை சார்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர்,சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/07/FB_IMG_1658142061048-1.jpg)
அதேபோல், சமத்துவபுரம் கிழக்கு பகுதியில் முறையாக தெரு அமைத்து சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். லிங்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வைக்க ஒப்புதல் வழங்கியும், இன்று வரை தண்ணீர் தொட்டி அமைக்கப்படாமல் உள்ளது. ஆகையால், உடனடியாக நீர் தொட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,
முன்னதாக ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் தினேஷ் குமார், கட்டுமான சங்க கிளை செயலாளர் செண்பகராஜ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி அலுவலகம் முன்பு கூறி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)