பாலியல் தொந்தரவு புகார்: போலீஸ்காரர் பணி நீக்கம்

 பாலியல் தொந்தரவு புகார்: போலீஸ்காரர் பணி நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர்இதற்கு முன்பு திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கடந்த 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு காக்கி சீருடையில் சென்றார். அங்கு இருந்த சிறுமி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்திவிடுவதாக மிரட்டி பணம் ரூ 5 ஆயிரம் கொண்டு வர வேண்டும் என்று கூறி சிறுமியின் காதலனை அனுப்பி விட்டு தனிமையில் இருந்த அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் குற்றம் நிரூபனம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக்கோப்பு சீர்குலைந்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல் புரிந்துள்ள போலீஸ்காரர் சசிகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பிறப்பித்து இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *