காமராஜர் 12௦-வது பிறந்தநாள்: சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

பெருந்தலைவர் காமராஜரின் 12௦-வது பிறந்தநாள் பல்வேறு தரப்பினர் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது வருகிறது.
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழாவாக காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இனிப்பு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் என்று இந்த விழா மெயின் ரோட்டில் உள்ள காமராசர் சிலை திடலில் நடைபெற்றது.

கிருஷ்ணன் கோவிலில் இருந்து பன்னீர் குடம் ஊர்வலத்தை கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் என்.சுந்தர் தொடக்கி வைத்தார். ஊர்வலம் காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.எம்.ராஜேஷ் அன்னதானத்தை தொடக்கி வைத்தார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் டி.குருஸ்தியான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன், மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், ,மாநில விவசாய அணி செயலாளர் எட்வின் தங்கராஜ் மாணவர் அணி துணை செயலாளர் நடசத்திர வெற்றி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
