பள்ளி மாணவிகளுக்கான பேச்சுபோட்டி

கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபள்ளி மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் தலைமை தாங்கினார். பின்னர் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது, பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு நோட்டு, பேனா பரிசுகள் வழங்கப்பட்டது,
நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி நகர தொண்டரணி செயலாளர் சங்கர், நகர மகளிர் அணி செயலாளர் ரதி தேவி ,கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
