• April 12, 2025

ஜாதி உணர்வை தூண்டக்கூடிய பொருட்கள் விற்கவேண்டாம்; வணிகர்கள் நடவடிக்கைக்கு காவல் கண்காணிப்பாளர் நன்றி

 ஜாதி உணர்வை தூண்டக்கூடிய பொருட்கள் விற்கவேண்டாம்; வணிகர்கள் நடவடிக்கைக்கு காவல் கண்காணிப்பாளர் நன்றி


தூத்துக்குடி மாவட்டத்தை குற்றங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.
மேலும் ஜாதிய பதற்றங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் ஊடுருவி, அதன் மூலம் கொடிய மோதல்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணியாக ஜாதி நூல், ஸ்டிக்கர், டி-சர்ட் போன்றவை அமைந்துள்ளது. தற்போது குழந்தைகளுக்கும், அவர்கள் வளரும் காலத்திலேயே ஜாதிய அடையாளத்தை வலியுறுத்தும் சக்தியாக அவைகள் இருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் உணர்ந்து, அவற்றை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் மூலம் பொதுமக்கள் முன்னிலையிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது
அதே போன்று கையில் கட்டக்கூடிய ஜாதி ரீதியான கயிறுகள், ஸ்டிக்கர் மற்றும் டி-சர்ட் உட்பட ஜாதி உணர்வை தூண்டக்கூடிய அனைத்து வகையான பொருள்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகளுடனும் காவல்துறையினர் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் விளைவாக எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு தாமாகவே முன்வந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகள், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடை வியாபாரிகள் ஜாதி ரீதியான கையில் கட்டக்கூடிய கயிறுகள், ஸ்டிக்கர், டி-சர்ட்கள் போன்ற பொருட்களை விற்க வேண்டாம். சமூக அக்கறையுடன் அனைத்து வியாபாரிகளும் இந்த வேண்டுகோளின் முக்கியத்துவத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வியாபாரிகளையும் வேண்டுகோள் விடுத்து மேற்படி பேரமைப்பு சார்பாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு சமூக அக்கறையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பத்திரிகை செய்தி வெளியிட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு முன்வந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பிற்கும், தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வியாபாரிகளுக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *