சர்க்கரை நோயினால் பாதிப்பு: நெல்லையப்பர் கோவில் யானைக்கு தோல் செருப்பு
![சர்க்கரை நோயினால் பாதிப்பு: நெல்லையப்பர் கோவில் யானைக்கு தோல் செருப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/07/3a0a1c24-fc05-4b4a-9e68-3c4d96378fbb-850x464.jpg)
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவில் யானை சர்க்கரை நோயினால் பாதிகப்பட்டுள்ளது. டாக்டர்கள் நேரில் வந்து யானையை பரிசோதித்து பார்த்தனர். உடலில் சரக்க்கரை அளவு கூடி இருப்பதால் கால் வலியினால் யானை அவதிப்பட்டு வருகிறது.
நீண்ட நேரம் நிற்கமுடியாமலும், நடப்பதற்கும் கஷ்டப்படுகிறது. இதனால் டாக்டர்கள் யானையின் கால்களுக்கு தோல் செருப்பு அணிவிக்கும்படி அறிவுரை கூறினார்கள்.
இதன் படி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானைக்கு ரூ. 12 ஆயிரம் செலவில் 4 தோல் செருப்புகள் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டு இருக்கிறது. அந்த செருப்புகள் யானைக்கு போடப்பட்டது. இதனை பக்தர்கள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)