• February 7, 2025

இரும்புக்கடை ஊழியர் வந்த காரை வழிமறித்து தகராறு: ரூ.10 லட்சத்துடன் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

 இரும்புக்கடை ஊழியர் வந்த காரை வழிமறித்து தகராறு: ரூ.10 லட்சத்துடன் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் செந்தில்குமார் (40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார். உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடையில் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு செந்தில்குமார் காரில் நேற்று மாலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2பேர் காரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது காரின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வசூல் பணம் ரூ. 10 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரது பணத்தை எடுத்து சென்றதை உணர்ந்த செந்தில்குமார் இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *