பிரச்சினைகள் தீர்க்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கண்ணாடி மாளிகை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஒரு கண்ணாடி மாளிகை இருக்கிறது. கண்ணாடி மாளிகை மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது என பலவித ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.
40 ஆண்டுகளாக ஆன்மிக ஆராய்ச்சி செய்த மிஸ்டிக் செல்வம் இதை உறுதிபடுத்தியுள்ளார்.
கண் திருஷ்டி, பொறாமையின் தாக்கத்தால் பலரது தொழில் மற்றும் வேலை பல தடைகளை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
இதை நீக்கிடவும் ,உங்களது நீண்டகாலப்பிரச்சினைகள் தீரவும் ஒரு சுலபமான பரிகாரம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த பரிகாரம் செய்வதற்கு எந்த வித நாள், நட்சத்திரமும் பார்க்க வேண்டாம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று முதலில் ஆண்டாளுக்கு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யவும். பின்னர் அங்கிருக்கும் கண்ணாடி
மாளிகைக்குள் செல்ல நுழைவுச்சீட்டு எடுத்துக் கொள்ளவும். இந்தப் பரிகாரம் செய்வதற்கு கண்ணாடி மாளிகையை 16 தடவை சுற்றி வர வேண்டியிருக்கும்.
அதற்கு ஏற்றாற்போல், தயாராகவும், கண்ணாடி மாளிகைக்குள் நுழைந்து முதலில் கன்னி மூலையில் (தென்மேற்கு மூலை) ஒரு நிமிடம் நின்று உங்களின்
குல தெய்வத்தை முதலில் மனதாரவேண்டிக் கொள்ளவும். அடுத்ததாக விநாயகரை மனதார வேண்டிக்கொள்ளவும். பிறகு உங்களின் வாழ்க்கை லட்சியத்தையும், உங்களது நீண்டகாலப்பிரச்சினைகள் தீரவும் வேண்டிக்கொள்ளவும்.
பிறகு கால் பங்கு சுற்றிவிட்டு, வாயுமூலையில் நின்று எதிரே இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்தவாறு இதே போல், ஒரு நிமிடம் வரை வேண்டவும்.
பிறகு அடுத்த கால் பங்கு சுற்றிவிட்டு, அக்னி மூலையில் நின்று இதே போல் ஒரு நிமிடம் வேண்டவும். அப்போது உடலுக்குள் ஒரு வித எரிச்சல் வெளிப்படுவதை உணர்வீர்கள். பிறகு மீண்டும் அடுத்த கால் பங்கு சுற்றி ஈசான மூலையில் இதே போல ஒரு நிமிடம் நின்று வேண்டவும்.
இவ்வாறு ஒரு சுற்று முடிந்ததும், மீதி 15 சுற்றையும் மிகவும் நிதானமாக கைகூப்பிய வண்ணம் மேற்கூறியது போல செய்து கண்ணாடிகளில் தெரியும் உங்களின் உருவங்களைப் பார்த்தவாறு சுற்றவும்.
16 சுற்றுகளும் சுற்றி முடித்த பின்பு வெளியே வந்து யாருக்காவது ஒரு வேளை அன்னதானமும் ,ஒரு பசுவுக்கு (கோவில் அருகே அல்லது நமது தெருவில்/ஊரில்)6 பழங்கள் தானம் அல்லது அகத்திக்கீரைதானம் செய்யவும்.
இது போல,தொடர்ந்து 9 நாட்கள் செய்யவேண்டும். வெளியூர்,
வெளிமாநிலம், தொலைதூர நகரங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்வதற்குப் பதிலாக வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் அல்லது ஓரிரு வாரத்துக்கு ஒரு நாள் வீதம் ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு 9 நாட்கள் செய்து முடித்ததும்,அடுத்த சில வாரங்களில் பரிகாரம் செய்தவர்களின் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடுகின்றன.
சிலருக்கு ஒரே தடவையிலும், சிலருக்கு 9 தடவைக்குள்ளும், சிலருக்கு 9 தடவை இப்படி செய்து முடித்தபின்னரும் பிரச்சினைகள் தீர்ந்திருக்கின்றன.
எளிமையான இந்த பரிகாரத்தை செய்ய முயன்று பார்க்கலாமா?
காசி விஸ்வநாதன், திருநெல்வேலி