2 வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடந்த 10.5.2022 அன்று சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழக முதல்வர் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் 53ன் படி அரசாணை எண் 259 உள்துறை (காவல் 13) இன் கீழ் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் 2 வாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேற்படி அறிவிப்பின்படி பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2 வாரங்களுக்கு ஒரு முறை அதாவது முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும்.
அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு . எல். பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.*
♻️மேலும் பொது மக்களின் முந்தைய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த குறைதீர் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.
*எனவே குறைதீர்க்கும் மனு கூட்டத்தை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்