• February 7, 2025

ஐவர் கால்பந்து: வ.உ.சி. பள்ளி அணி வெற்றி

 ஐவர் கால்பந்து: வ.உ.சி. பள்ளி அணி வெற்றி

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
கோவில்பட்டி கால்பந்து கழகம், சண்முகையா பாண்டியனார் பேரவை இணைந்து நடத்திய இந்த போட்டியில் வட்டார அளவில் 8 அணிகள் பங்கு பெற்றன
இறுதி போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், காமநாயக்கன் பட்டி அணியும் மோதின இதில் வ.உ.சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. காமநாயக்கன்பட்டி அணி 2-வது இடம் பெற்றது.
3-வது, 4-வது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி காமராஜ் பள்ளி அணியும், வீரவாஞ்சி நகர் அணியும் மோதின. காமராஜ் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கால்பந்து கழக செயலாளர் டி. தேன் ராஜா தலைமை தாங்கினார். ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். மாரித்துரை வரவேற்றுப் பேசினார். மாவட்ட தடகள வீராங்கனை சண்முகப்பிரியா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர். பிரிதீப் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *