தேசிய சிலம்ப போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு வரவேற்பு
நேபாளத்தில் போக்கரா என்ற இடத்தில் தேசிய அளவில் மாணவா்களுக்கான சிலம்பம், கபடி, பேட்மிண்டன், யோகா, கிரிக்கெட், தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில், தமிழகத்திலிருந்து 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். தூத்துக்குடி சவோரியார்புரத்திலிருந்து தேவராஜ் வாஸ்தாவி சிலம்பாட்டம் கழகம் சார்பில் 4 மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில், 5 ம் வகுப்பு மாணவர் பியா்சன் முதல் பரிசான தங்கப்பதக்கம், 8 ஆம் வகுப்பு மாணவர் ஜெய்கணேஷ், 6ம் வகுப்பு மாணவர் அபிவந்த், 9ம் வகுப்பு மாணவர் முத்துவேல் ஆகிய 3 பேரும் வெள்ளி பதக்கம், பெற்றனா்.
பதக்கம் வென்ற சாதனை வீரர்கள் ரெயில் மூலமாக கோவில்பட்டி வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்தனர். இவர்களுக்கு நேற்று இரவு தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி விலக்கில் வரவேற்பு அளிக்கபட்டது. ஊர் பொது மக்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி ஒன்றிய தி.மு.க. கவுண்சிலா் இரா, தனுஸ் பாலன் தலைமையில், நாடார் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவா் சதீஸ்குமார், பாண்டியனார் தொழிற்ச் சங்க மாவட்ட செயலாளா் சித்திரை விஜயன், நாடார் முன்னேற்ற பேரவை ஒன்றிய பொருளாளா் செல்வகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்ற அமைப்பாளா் தமிழன் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனர். அவர்கள் சாதனை வீரர்களுக்கு பொன்னாடை அனிவித்து பரிசு வழங்கினார்கள்.