மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்; தூத்துக்குடியில் 11-ந் தேதி நடக்கிறது.

 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்; தூத்துக்குடியில் 11-ந் தேதி நடக்கிறது.


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு சமஉரிமை திட்டத்தின் கீழ் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான (18 வயதுக்கு மேற்பட்ட) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்த எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட
அதன்படி வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அனைத்து வகை (18 வயதிற்குமேற்பட்ட) மாற்றுத்திறனாளிகளும் தங்களது புகைப்படம், ஆதார்அட்டை, தேசிய அடையாளஅட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக திட்ட இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கவும் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே, மேற்கண்ட பயிற்சியை மேற்கொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *