கருணாநிதி பிறந்தநாளில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
![கருணாநிதி பிறந்தநாளில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு](https://tn96news.com/wp-content/uploads/2022/06/unnamed.jpg)
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 கொண்டாடப்பட்டது. இதையடுத்து, கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஜூன் 3ம் தேதி பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர தி.மு.க., சார்பில் தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலாளரும், கோவில்பட்டி நகராட்சி சேர்மனுமான கருணாநிதி தலைமையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 18 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார்.
பின்னர், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் நகர தி.மு.க., சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவில்பட்டி பயணியர் விடுதியில், ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று விளையாடிய கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் மற்றும் கார்த்திக் ஆகியோரை பாராட்டி, பரிசு வழங்கினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)