கோவில்பட்டியில் நாளைய தெப்பத்திருவிழா நிகழ்ச்சிகள் விவரம்

பழைய படம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனிப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று 10-வது நாளான இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.
11 வது திருநாள் நிகழ்ச்சியாக நாளை 15-4-2025 செவ்வாய்கிழமை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் காலை 10 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மாலை 6. மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனங்களில் சுவாமி- அம்பாள் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு சொந்தமான அடைக்கலம் காத்தான் மண்டபத்திற்கு வந்து தீபாராதனை நடைபெறும். அதன்பின் செண்பகவல்லி அம்பாள் கோவில் தெப்பத்திற்கு எழுந்தருளல் நடைபெறும்
தெப்பத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதத்தில் செண்பகவல்லி அம்பாளும் பூவனநாத சுவாமியும் உலா வருதல் நடக்கிறது..
மாலை 6 மணிக்கு கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அன்னதானம் நடைபெறும் மண்டகப்படிதாரர் கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கம்.
சுவாமி அம்பாள் பவனியில்,பத்திரகாளியம்மன் திருக்கோயில் இசைவாணர்
நாதசுர இசைத்தென்றல் கணேசன்,.கோபி குழுவினரின் நாதஸ்வரம் இடம்பெறுகிறது.


