கோவில்பட்டி புனித ஓம் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி கெச்சிலாபுரத்தில் உள்ள புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் 17 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா , புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் தாயப்பா கார்த்திகேயன், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் செயலாளர் நம்சீனிவாசன், தொழிலதிபர் ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளித்து, வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.97 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி,உஷாராணி,சிவராம், கல்லூரி முதல்வர் அகஸ்டின் பென்ஸ் ராஜ்,புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் பொன்தங்க மகேஸ்வரி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
