• April 4, 2025

முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்

 முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்
கும்பாபிஷேக யாகசாலை தயாராகிறது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலி வெட்டி கண்மாய் கரையில்  பூர்ணா தேவி,புஷ்கலா தேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் அமைந்து உள்ளது

 பிரசித்தி பெற்ற இக் கோவிலின் புணரா வர்த்தன அஷ்டபந்தன நூதன சாலகோபுர மகா கும்பாபிஷேக விழா வருகிற 10 மற்றும் 11ஆம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது

 கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா பிரமாண்டமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை ஒட்டி கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கருப்பசாமி கோவில் அருகே கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி கோவிலில் பாலாலயம் மற்றும் பாலஸ்தாபன பூஜை நடைபெற்றது.

அன்றைய தினம் நடைபெற்ற பல்வேறு பூஜைகளை தொடர்ந்து மூலவர் சிலைகள் கருவறையில் இருந்து எடுக்கபட்டு பத்திரப்படுத்தப்பட்டன, கோவில் வாசலில் உள்ள கருப்பசாமி சன்னதி அருகே மூலவர் போட்டோ வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவில் கோபுரம், கோவில் வளாகத்தில் உள்ள குதிரை சிலைகள், மற்ற சாமி சிலைகள் ஆகியவற்றுக்கான பெயிண்டிங் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் சேதமடைந்த சிலைகள், பழுதடைந்த மின் சாதன பொருட்கள் போன்றவை சரி செய்யும் பணியும் நடந்து முடிந்துள்ளது.

கும்பாபிஷேக விழா தொடங்கும் 10ம் தேதி அன்று யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இதற்காக கோவில் முன்புற வாசலில் உள்ள காலி இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்து நாடார், கம்பளத்து நாயக்கர், தேவர், ரெட்டியார் ஆகிய நான்கு சமுதாய மக்கள் சேர்ந்து நடத்தும் இந்த மகா கும்பாபிஷேகம் விழாவில் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று கோவில் தலக்கட்டு வரி செலுத்துவோர் வழக்கமாக செலுத்தும் ரூ. 1,000 மற்றும் கும்பாபிஷேக வரி ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கோவில் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கோவில் மகா கும்பாபிஷேக திருப்பணி வேலைகளை கோவில் நிர்வாக குழு தலைவர் எஸ்.தங்கவேல், பொருளாளர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் அங்கேயே முகாமிட்டு மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *