ஊரக வேலை உறுதி திட்ட நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து விளாத்திகுளம். ஓட்டப்பிடாரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

கடந்த நான்கரை மாதங்களாக 100 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ரூ. 4034-கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து விளாத்திகுளம் பிள்ளையார்நத்தத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்ககண்டேயன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான எம் சி.சண்முகையா ஏற்பாட்டில் குலசேகரநல்லூர் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமையில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
தலைமை செயற்குழு உறுப்பினர் .செந்தூர்மணி தலைமை பொதுக்குழு உறுப்பினர் த.ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்,

