• April 4, 2025

விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள்

 விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள்

மத்திய ரெயில்வே நிர்வாகம், கோடை விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி.- கன்னியாகுமரி இடையே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுபற்றி மத்திய ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

மும்பை சி.எஸ்.எம்.டியில் இருந்து ஏப்ரல் 9-ந் தேதி முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாராந்திர சிறப்பு ரெயில் புதன்கிழமைதோறும் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்  வியாழக்கிழமை மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி.க்கு ஏப்ரல் 10-ந்தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரையில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயில் வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 3-வது நாளான சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. வந்துசேரும்.

இந்த சிறப்பு ரெயில் தாதர், கல்யாண், லோனாவாலா, புனே, தவுண்ட், குருத்வாடி, சோலாப்பூர், கலபுர்கி, வாடி, கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்திராலயம் ரோடு, குண்டக்கல், ஆனந்தபூர், தர்மாவரம், எலகங்கா, கிருஷ்ணாராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.

இந்த ரெயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்-4, மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்- 6, முன்பதிவு படுக்கை பெட்டிகள்-4, மற்றும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *